அரசு அதிகாரிகள் நான்கு பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ம்

அரசு அதிகாரிகள் நான்கு பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ம்

அ.தி.மு.க. அரசுக்கு எதிராக இது போன்ற தீர்ப்புகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முதல் மற்ற நீதிபதிகள் வரை பல முறை விதித்த போதிலும், அதைப் பற்றி முதல் அமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ கவலைப்படுவதாக இல்லை. குறிப்பாக மருத்துவமனை விதி மீறல்கள் குறித்த ஒரு வழக்கில் நீதிபதிகள் கோரியவாறு 18-1-2016 அன்று தமிழக அரசின் சார்பில் உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படவில்லை.
 
 
அரசு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டுமென்று கேட்டபோது, நீதிபதிகள், “பதில் மனு தாக்கல் செய்ய எத்தனை முறை அவகாசம் வழங்குவது? ஒவ்வொரு முறையும் இவ்வாறு கால அவகாசம் கேட்பது சரியானது அல்ல” என்று கருத்து கூறியதோடு, பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பல முறை அவகாசம் கொடுத்தும் பதில் மனு தாக்கல் செய்யாததால், தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர், தீயணைப்புத் துறை இயக்குனர், இந்திய மருத் துவக் கவுன்சில் செயலாளர் ஆகியோருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழக்கு செலவு விதிக்கிறோம்.
 
 
இவர்கள் நான்கு பேரும் நேரில் அடுத்த விசாரணையின் போது ஆஜராக வேண்டும்” என்று கூறியிருக்கிறார்கள்.
இதற்கு அடுத்த நாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் கும்பகோணத்தில் சட்ட விரோதக் கட்டிடத்தில் வைக்கப்பட்ட “சீலை” அகற்ற பிறப்பித்த உத்தரவை மறைத்து பதில் மனு தாக்கல் செய்ததற்காக, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் செயலாளரை நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம்.சத்திய நாராயணா ஆகியோர் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
 
 
ஏன், 27-1-2016 அன்று கூட அரசுப் பணி மற்றும் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தாக்கல் செய்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத தமிழக உயர் கல்வித் துறைச் செயலாளருக்கு இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.