அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகளின் தற்கொலைகள்! தலைவர் கலைஞர் பதில்கள்

அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகளின் தற்கொலைகள்! தலைவர் கலைஞர் பதில்கள்

கேள்வி :- ஜெயலலிதா ஆட்சியில் மற்றொரு ஐ.பி.எஸ். அதிகாரி மர்மமான முறையில் இறந்ததாகச் செய்தி வந்திருக்கிறதே?

 

கலைஞர் :- பெங்களூரைச் சேர்ந்த ஹரீஷ்  என்ற ஐ.பி.எஸ். அதிகாரி 33 வயதே ஆனவர்.    சென்னையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வந்திருக்கிறார்.  அவர் தனது படுக்கையில் பிணமாகக் கிடந்திருக்கிறார்.   அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.   நீண்ட காலமாக அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றும்அதன் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகவும்அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  இந்த ஆட்சியில் சில மாதங்களுக்கு முன்பு முத்துக்குமாரசாமி என்ற அதிகாரி ஒருவரும்விஷ்ணுப்ரியா என்ற காவல் துறை அதிகாரி  ஒருவரும் தற்கொலை செய்து கொண்டு மாண் டார்கள்.   அந்த வழக்குகள் என்ன ஆயின  என்றும் தெரியவில்லை.   இந்த வரிசையில்தான் இப்போது ஹரீஷ்ஐ.பி.எஸ்.

 

இந்த அதிகாரியின் மறைவு குறித்து,  இவருடன்  பயிற்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு ஐ.பி.எஸ். அதிகாரி தெரிவித்துள்ள தகவலில்,  மறைந்த காவல் துறை அதிகாரியின் காதல் தோல்வி என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்றும்அவரை தற்போது பெண் பித்தனாகவோமது அடிமையாகவோ சித்தரிக்கும் முயற்சி நடைபெறு கிறது என்றும்,  முத்துக்குமாரசாமி வருமான வரித் துறைக்குப் பயந்தார்விஷ்ணுப்ரியா காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று கதை கட்டியது போல இதையும் இழிவுபடுத்த வேண்டாம் என்றும்,  முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம்தினந்தோறும் விசாரணை என்ற பெயரில் ஹரீசுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தார் என்றும்ஒருமுறை காவல் துறை ஆய்வுக் கூட்டத்தில் தனக்கு எஸ்.பி. பிரமோஷன் அளிக்க வேண்டுமென்று ஹரீஷ் கெஞ்சியதாகவும்ஆனால் டி.ஜி.பி. ராமானுஜம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும்,  அவருடைய தற்கொலைக்கு முதுகெலும்பில்லாத மூத்த காவல் துறை அதிகாரிகள்தான் காரணம் என்றும் வாட்ஸ்-அப் மூலமாகத் தெரிவித்திருப்பது அலட்சியப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. எனவே எப்போதும் போல ஹரீஷ் தற்கொலையையும் மூடி மறைத்து விடாமல் உண்மையை உலகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும்.

 

கேள்வி :- அ.தி.மு.க. வின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் முதல் அமைச்சரின் அயராத முயற்சிகளாலும்கடும் உழைப்பாலும்  தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக விளங்குகிறது என்று தெரிவித்திருக்கிறார்களே?

 

கலைஞர் :- ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகி விடும் என்பதுதானே கோயபல்ஸ் தந்திரம்! அதிலே உறுதியாக இருக் கிறார்கள் போலும்! ஆனால் "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான் எடுபடும்" என்பார்கள்.  இவர்களின் புளுகு எட்டு நாட்களுக்குக் கூட நீடிக்கவில்லை.  18-2-2016தேதிய "தினமலர்" நாளேட்டில் "மத்தியத் தொகுப்பிலிருந்து 1,600 மெகாவாட் அவுட் - மின் தேவை அதிகரிப்பால் வாரியம் தவிப்பு" என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில், "மத்திய அரசின் கூடங்குளம்வல்லூர்என்.எல்.சி.  மின் நிலையங்களில்  1,600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால்மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.  அதே நாளேட்டில் மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, "விரைவில் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்க வுள்ளன.  அதைத் தொடர்ந்து சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. அதே நேரத்தில்கோடைக் காலமும் துவங்குவதால்தமிழகத்தின் மின் தேவை மேலும் அதிகரிக்கும். அப்போதும் இதே நிலை தொடர்ந்தால்வழக்கமான மின்வெட்டு நேரம் அதிகரித்துபொதுமக்கள் அவதிக்குள்ளாவர்" என்று குறிப்பிட் டுள்ளார்.

 

கேள்வி :-  பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்ததில் பேரம் பேசப்பட்டது என்றும்தகுதியில்லாதவர்கள் எல்லாம் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார்கள் என்றும் குறைபாடுகள் கூறப்பட்டு வந்த நேரத்தில்அவசர அவசரமாக அந்தத் துணைவேந்தர்கள் நியமனம் நடைபெற்றுள்ளதே?

 

கலைஞர் :- ஏடுகளும்கல்வியாளர்களும்  துணைவேந்தர்கள் நியமனம் பற்றி குற்றச்சாட்டு களைக் கூறி வந்த நேரத்தில் அதைப்பற்றி இந்த ஆட்சியினர் கவலைப்படவே இல்லை.  தற்போது  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவர் குழுவில் ஒருவரான பேராசிரியர் மு.ராமசாமி தனது பதவியை ராஜினாமா செய்ததோடுதேர்வு நடைபெற்ற நேரத்தில் எப்படிப்பட்ட முறைகேடுகள் எல்லாம் நடைபெற்றன என்றும்அதைப்பற்றி தான் எதிர்த்த நேரத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்றும் கூறியிருக்கிறார். துணைவேந்தர் களின் நியமனங்கள் எவ்வாறு நடைபெற்றன என்பதற்கு பேராசிரியர் மு. ராமசாமி அவர்கள் "இந்து" நாளிதழுக்கு அளித்துள்ள விவரங்களே தக்க சான்றாக உள்ளன.

 

கேள்வி :- மத்திய பா.ஜ.க. அரசு மக்களுக்குப் பிடிக்காதவேண்டாத பல காரியங்களை அமைதி யாகச் செய்து விட்டு வேடிக்கை பார்க்கிறதே?

 

கலைஞர் :- அப்படிப் பல காரியங்களைச் சொல்ல முடியும். அண்மைக் காலத்தில் நடைபெற்ற ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால்புற்றுநோய்எய்ட்ஸ்எலும்பு நோய்கள்,  ரத்தக் கசிவு  போன்ற  76 வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு இதுவரை வழங்கப் பட்டு வந்த இறக்குமதி வரிச் சலுகையை கடந்த வாரம் மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.  இதன் காரணமாக அந்த மருந்துகளின் விலை  30சதவிகிதம் வரையில் உயரும். இலட்சக்கணக்கான ஏழையெளிய மக்களின் நோயுடன் மிக நேரடியாகத் தொடர்புடைய இந்த விலை உயர்வு   அவர்களைப் பெரிதும் பாதிக்கும். இறக்குமதி செய்யப்படும் மருந்துகளால் விலையில் பெரிய பாதிப்பு வராது என்ற கருத்தும் ஒரு சிலரால் கூறப்படுகிறது.  மத்திய அரசின் இந்த முடிவு சாதாரண மக்களை நேரடியாகப் பாதிக்கிறதா என்பதை சில வாரங்களுக்குப் பின்தான் உறுதியாகக் கூற முடியும்.

 

கேள்வி :- மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு அதிகமாகத் தலையிடு கிறதுதடை போட நினைக்கிறது என்ற குற்றச்சாட்டு பற்றி?

 

கலைஞர் :- மத்திய அரசின் அண்மைக் காலச் செயல்பாடுகள் இந்தக் கருத்தைத்தான் தெரிவிக் கின்றன. இந்திய உயர் கல்வி நிலையங்களில்  கல்விக்குச் சற்று அப்பால் மாணவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால்,  உடனே மத்திய அரசு அதிக அளவுக்கு ஆத்திரம் கொள்கிறது.  சில வாரங் களுக்கு முன்னால் ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழக ஆய்வு மாணவர்ரோகித் வெமுலாமத்திய அரசை விமர்சித்து மேற்கொண்ட போராட்டம் காரணமாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டதும்உதவித் தொகை நிறுத்தப்பட்டதும் மனம் நொறுங்கி தற்கொலை செய்து கொண்டு மாண்டதுமான நிகழ்வு நடைபெற்றது.     சில மாதங்களுக்கு முன்புசென்னை ஐ.ஐ.டி.யில்  "அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம்"  தடை செய்யப் பட்ட சம்பவமும் இப்படிப்பட்டதுதான்.  இதன் தொடர்ச்சியாகத்தான் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகச் சம்பவம். ஜே.என்.யு. என்ற பெயரால் அழைக்கப்படும் அந்தப் பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார்,  தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் இன்று இந்தியா முழுவதும் வேகமாகப் பேசப்படுகிறது. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு தினத்தன்று இந்திய அரசைக் கண்டித்து மாணவர்களைத் திரட்டி பேரணி நடத்தியதற்காகத்தான் கன்னையா குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கருத்துச் சுதந்திரத்தை வெளிப் படுத்துவது எப்படி தேசத் துரோகம் ஆகும் என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது. கைதுக்கு பெரும் எதிர்ப்புகள் வந்ததும்,  கன்னையா குமார் நடத்திய பேரணிக்குப் பின்னால் தீவிரவாத சக்திகளின் தொடர்பு இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.   ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிட மறுக்கிறது.  இந்தப் பிரச்சினை எங்கே போய் நிற்குமோ?

 

கேள்வி :- கிரானைட் முறைகேடு வழக்கை நடத்த அரசுக்கு அக்கறை இல்லை என்று மேலூர் நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறதே?

 

கலைஞர் :- இதுவரை உச்ச நீதிமன்றம்உயர் நீதிமன்றம் ஆகியவைதான் இந்த அரசுக்கு அவ்வப்போது கண்டனம் தெரிவித்து வந்தன.  இப்போது மேலூர் நீதிமன்றமே, "அரசுத் தரப்பு பலமுறை வாய்தா கேட்டும் நீதிமன்றம் கால அவகாசம் அளித்து வந்துள்ளது. ஆனால் வழக்கில் சாட்சிகளை ஆஜர்படுத்தவும் விசாரிக்கவும் அரசுத் தரப்பு முயற்சிக்கவில்லை. இந்த வழக்கினை நடத்த அரசுத் தரப்பில் அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது" என்றெல்லாம்  கூறியிருக்கிறது. உச்ச நீதிமன்றஉயர் நீதிமன்றக் கண்டனங்களில் அக்கறை காட்டாத வர்கள்இதற்காவது அக்கறை காட்டுகிறார்களா என்று பார்க்கலாம்.

 

கேள்வி :- முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும்  110வது விதியின் கீழ் அறிக்கை படிக்க ஆரம்பித்து விட்டாரே?

 

கலைஞர் :- 16ஆம் தேதிதான் அரசின் சார்பில் இந்த ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை பேரவையில் வைக்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா 18-2-2016 அன்று  படித்த அறிக்கையை அந்த அறிக்கையிலேயே சேர்த்திருக்கலாம். தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவதாகத் தெரிவித்து  110வது விதியின் கீழ் இந்த அறிக்கையைப் படித்துள்ளார்.  அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில்

 

"58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசுப் பேருந்துகளில் பக்கத்து நகரங்கள்கிராமங்களுக்குச் சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்கள்.  2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில் கூறியதை 2016ஆம் ஆண்டுஇன்னும் சில வாரங்களில் பொதுத் தேர்தல் வரப்போகிறது என்ற நிலையில்முதலமைச்சர் இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.  அதுவும் கூட எப்படித் தெரியுமா?  60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,சென்னை மாநகரில் ஓடுகின்ற குளிர் சாதன வசதி இல்லாத பேருந்துகளில் மட்டும் பத்து முறை பயணம் செய்யலாமாம்! தேர்தல் அறிக்கையில் 58வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசுப் பேருந்துகளில் பக்கத்து நகரங்கள்கிராமங்களுக்குச் சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று கூறிவிட்டுதற்போது ஐந்தாண்டுகளுக்குப் பிறகுசென்னையில் மட்டும் குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகளில் மட்டும் 10 முறை பயணம் செய்யலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.  இதுதான் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறை வேற்றுகின்ற நடவடிக்கை!  முதலமைச்சர் ஜெயலலிதா அதே அறிக்கையில், 2011ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் கூறியிருக்கிறார். அந்த அறிவிப்பு உண்மைக்கு மாறானது என்பதற்கு தேர்தல் அறிக்கையில் கூறியவற்றில் எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதற்கு ஒருசில உதாரணங்களைக்  கூறுகிறேன்.

 

"வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிதண்ணீர் இலவசமாக வழங்கப் படும்" - திட்டம் வாய்மொழியாக அறிவிக்கப் பட்டுள்ளதே தவிரஎங்கேயும் இலவசமாக குடி தண்ணீர் இதுவரை வழங்கப்படவில்லை.

 

"அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள சூரிய சக்தி மின்சாரப் பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்" என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்களேஅனைவருக்கும் கட்டிக் கொடுத்து விட்டீர்களா?

 

வீடில்லா ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்ட் இடம் அளிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்களேவீடில்லா ஏழைக் குடும்பங்களுக்கெல்லாம் கொடுத்து விட்டீர்களா?

 

அனைத்துக் கிராமங்களுக்கும்,நகரங்களுக் கும்  இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழி வகை செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. அனைத்துக் கிராமங்களுக்கும் மும்முனை மின்சார இணைப்பு கொடுத்து விட்டீர்களா?

 

2012ஆம் ஆண்டுக்குள் அதாவது இரண்டு வருடங்களுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சி களில்நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள்.  என்ன ஆயிற்று அந்தத் திட்டம்

  

வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. கூறியிருந்ததே,  என்ன ஆயிற்று அந்தத் திட்டம்?

 

கிராமப்புறத் தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்களே?  என்ன ஆயிற்று அந்தத் திட்டம்?

 

இந்த சிறப்பு மின் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை பன்முக சமூகபொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி 1,20,000 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 ஆண்டுகளில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள்.  மின் வாரியத்தின் கடன்தான் உயர்ந்ததே தவிரகூடுதல் வருமானம் எதுவும் இல்லை.

 

தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைக் குனிவில் இருந்து மீட்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள்.  தற்போது 2இலட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளார்கள்.  இதுதான் தலைக் குனிவில் இருந்து மீட்ட இலட்சணமா?  

 

ஒருசில திட்டங்களை மட்டும் எடுத்துக்காட்டுக்காகத் தெரிவித்தேன். ஆனால் பேரவையில் முதலமைச்சர்,  தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக தவறான தகவலைத் தந்துள்ளார். "தினமலர்" நாளேடு இந்தச் செய்திக்கு வெளியிட் டுள்ள தலைப்பு என்ன தெரியுமா?  "முதல்வர் ஜெ. ஜோக்" என்பதுதான்!   முதலமைச்சரே  இப்படிப் பேரவைக்கு தவறான தகவலைச் சொல்லலாமா?  என்பதற்கு பேரவைத் தலைவர் என்ன பதில் கூறுகிறார்?

 

கேள்வி :- அரசு அலுவலர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அ.தி.மு.க. அரசு,  வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் கிடையாது என்று உத்தரவிட்டிருப்பதாகச்  செய்தி வந்துள்ளதே

 

கலைஞர் :- போராடும் அலுவலர்களை முதல் அமைச்சரே அழைத்துப் பேசி ஒரு முடிவு காண்பதுதான் ஜனநாயக அரசுக்கு அழகு.   வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் கிடையாது என்று கூறி போராட்டத்தை ஒடுக்க முனைவது அ.தி.மு.க.வுக்கே உரிய சர்வாதிகார முறை.