பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடுமா? தலைவர் கலைஞர் கடிதம்

பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடுமா? தலைவர் கலைஞர் கடிதம்

முதலமைச்சர் ஜெயலலிதாவும்மின் துறை அமைச்சரும் தங்கள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி விட்டதாக அடிக்கடி சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.  இன்னும் சொல்லப்போனால் 16-2-2016 அன்று பேரவையில் படிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பத்தி 43இல், “கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தியதன் மூலமாக  4,455.50 மெகாவாட் உற்பத்தித் திறன்” கிடைத்திருப்பதாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். நிதி நிலை அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்ட வாசகம் இது. ஆனால் உண்மையில் கடந்த ஐந்தாண்டுகளில் புதிய திட்டங்களைச் செயல்படுத் தியதன் மூலமாக 4,455.50மெகாவாட் மின் உற்பத்தி தமிழகத்திற்குக் கிடைத்திருக்கிறதாஅப்படி கிடைத்திருந்தால் எந்தெந்த மின் திட்டங்கள் மூலம் எத்தனை மெகாவாட் மின் உற்பத்தி கிடைத்ததுஅந்த மின் உற்பத்தித் திட்டங்கள் எந்த ஆட்சிக் காலத்திலே எப்போது தொடங்கப் பட்டனஉண்மையில் அவை அ.தி.மு.க.வின் கடந்த ஐந்தாண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டமாஎன்பதை ஆதாரப்பூர்வமாக ஜெயலலிதாவோ அல்லது துறையின் அமைச்சரோ வெளிப்படையாகச் சொல்லத் தயாரா?

2011ஆம் ஆண்டுஅ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன்,  4-8-2011 அன்று பேரவையில் படித்த நிதி நிலை அறிக்கையின் 68வது பத்தியில், “மாநில அரசுவடசென்னை மூன்றாம் நிலை,  நான்காம் நிலை உற்பத்தி,  உடன்குடிஎண்ணூர் இணைப்புகுந்தா விசை சேமிப்பு ஆகிய மின் உற்பத்தி திட்டங்களை விரைவுபடுத்தும்.   இத்திட்டங்களின் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் கூடுதலாக 5,100 மெகாவாட் மின்சக்தி கிடைக்கும்.  


2011-2012ஆம் ஆண்டில் 4,800 கோடி ரூபாய்ச் செலவில் 800 மெகாவாட் உடன்குடி விரிவுத் திட்டம், 9,600கோடி ரூபாய்ச் செலவில் 1,600 மெகாவாட்  உப்பூர் அனல் மின்திட்டம்,  3,600 கோடி ரூபாய்ச் செலவில் 40ஆண்டு பழமை வாய்ந்த எண்ணூர் அனல் மின்  இயந்திரத்திற்குப் பதிலாக 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் இயந்திரம் நிறுவும் திட்டம், 4,800 கோடி ரூபாய்ச் செலவில் 800 மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலை உற்பத்தித் திட்டம் ஆகியவை தொடங்கப்படும்” என்று அறிவித்தார்களே,  இந்தத் திட்டங்கள் எல்லாம் தொடங்கப்பட்டு விட்டனவா?

 

இதற்கும் 2015-2016ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசின் சார்பாக பேரவையில் வைத்த கொள்கை விளக்கக் குறிப்பில் விளக்கம் அளித்திருக்கிறார்கள். “நடப்பில் உள்ள மின் உற்பத்தித் திட்டங்களின் தற்போதைய நிலை” என்ற தலைப்பில்இந்தத் திட்டங்கள் என்ன நிலையில் உள்ளன என்று கூறினார்கள்.  அதன்படிஎண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கம் பற்றிக் கூறும்போதுஅந்தத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் இப்போதுதான் நடைபெற்று வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் அனல் மின் திட்டம் நீதிமன்றத்திலே உள்ளது.  இன்னும் பணி தொடங்கப் படவில்லை.  வடசென்னை அனல் மின் திட்டம் நிலை - 3 ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் நிலையிலே உள்ளது. உப்பூர் அனல் மின் திட்டப் பணிகளும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் நிலையில்தான் உள்ளது.  எண்ணூர் மாற்று அனல் மின் திட்டத்திற்கு  நிலம் சார்ந்த சுற்றுச் சூழல் தாக்க ஆய்வுக்கான பணி ஆணை கலந்தாய்வாளருக்கு 16-7-2015 அன்று வழங்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கான பணிக்கே ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திட்டம் எப்போது தொடங்குமோஉடன்குடி அனல் மின் திட்டம் நிலை 1 திட்டத்திற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுஅதன் மீது நீதிமன்றத்திலே வழக்கு நிலுவையிலே உள்ளது.   உடன்குடி அனல் மின் திட்டம் நிலை 2க்கு அரசாணை 3-2-2015 அன்று தான் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நிலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறதாம்.  உடன்குடி அனல் மின் திட்டம் நிலை 3க்கு கடல் மற்றும் நிலம் சார்ந்த  சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறதாம்.    குந்தா நீரேற்று மின் திட்டம்நீலகிரியில் அமைக்க தற்போதுதான் சுரங்கப் பணிகளுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னமும் திட்டம் தொடங்கப்படவில்லை. இதற்குப் பிறகு முதல் அமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் தொடங்கப் போவதாக அறிவித்த  சில்லஹல்லா திட்டமும் இன்னும் தொடங்கப்படவில்லை.

 

இந்த விவரங்கள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் அவையிலே வைக்கப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பிலேயே இடம் பெற்றவையாகும்.  இந்த விவரங்களிலிருந்து 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எந்தெந்த மின் திட்டங்களைத் தொடங்கப் போவதாக அறிவித்தார்களோஅதில் எந்தத் திட்டமும் ஐந்தாண்டுகள் முடிவடைந்த நிலையிலும்  தொடங்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாகவும்தெளிவாகவும் புரிந்து கொள்ள முடியும். எனவே கடந்த மாதம் நிதி நிலை அறிக்கையில் படித்த “கடந்த ஐந்தாண்டுகளில் புதிய திட்டங்களைச் செயல்படுத் தியதன் மூலமாக 4,455.50 மெகாவாட் உற்பத்தி” என்ற விவரம் முற்றிலும் உண்மைக்கு மாறானது. இந்த 4,455.50 மெகாவாட் உற்பத்தித் திறன் என்பது முழுக்க முழுக்க திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்து கிடைத்த மின்சாரம் என்பதுதான் உண்மை.

 

அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லையா என்று ஜெயலலிதா கேட்பாரானால்அவருக்குச் சொல்கிறேன். 27 மெகாவாட் மின்சாரம் மட்டும்தான் அவருடைய ஆட்சியில் துவக்கப்பட்ட திட்டங்களிலிருந்து மின் உற்பத்தி கிடைத்திருக்கிறது. ஆனால்கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் (2011-2016)  தொடங்கப் பட்ட திட்டங்களிலிருந்து ஒரு யூனிட் கூட மின்சாரம் கிடைக்கவில்லை. அ.தி.மு.க. ஏற்கனவே ஆட்சியிலே இருந்த 2001-2006ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்து வெறும்  27 மெகாவாட் மின்சாரமும்எஞ்சிய 4,428மெகாவாட் மின்சாரம்தி.மு. கழக ஆட்சியிலே தொடங்கப் பட்ட திட்டங்களிலிருந்தும்மத்திய அரசுதிட்டங்களிலிருந்தும்தான் நிதி நிலை அறிக்கையில் தற்போது குறிப்பிட்டுள்ள 4,455 மெகாவாட் கிடைத் துள்ளது என்பதுதான் உண்மையான விளக்கம்.  

 

2011லிருந்து 2015ஆம் ஆண்டு வரை எந்தெந்த திட்டங்களிலிருந்து மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனஅந்தத் திட்டங்கள் எல்லாம் யார்யாருடைய ஆட்சிக் காலத்தில்,எப்போது தொடங்கப்பட்டன என்ற விவரங்களையும் நான் விரிவாகக் கூறுகிறேன்.

1.            பவானி கட்டளை கதவணை 2 -  இந்தத் திட்டம் 1996-97இல் தி.மு. கழக ஆட்சியில் 99.15கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 30 மெகாவாட். 

2.            வல்லூர் (அலகு 1) - இந்தத் திட்டம் 2007ஆம் ஆண்டில் தி.மு. கழக ஆட்சியில் 8,444கோடி ரூபாய் மதிப்பீட்டில் என்.டி.பி.சி.யும்தமிழக மின்வாரியமும் இணைந்து தொடங்கப்பட்டது. 500 மெகாவாட்.

3.            பவானி கட்டளை கதவணை - 2 - இந்தத் திட்டம்,  1996-1997இல் தி.மு.க. ஆட்சியில்99.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 30 மெகாவாட்.

4.            மேட்டூர் அனல் மின் திட்டம் நிலை - 3 - இந்தத் திட்டம்,  2008இல் தி.மு.க. ஆட்சியில் 3,550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 600 மெகாவாட்.

5.            வடசென்னை அனல் மின் நிலையம் (நிலை 2)  (அலகு 1) -இந்தத் திட்டம் 2008இல் தி.மு.க. ஆட்சியில்  3,095 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 600 மெகாவாட்.

6.            வட சென்னை (நிலை 2) (அலகு 2) - இந்தத் திட்டம், 2008இல் தி.மு.க. ஆட்சியில் 2718கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.  600 மெகாவாட். 

7.            வல்லூர் (அலகு 3) - இந்தத் திட்டம் 2007இல் தி.மு. கழக ஆட்சியில் 8444 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 500 மெகாவாட்.

8.            தூத்துக்குடி அனல் மின் நிலையம் - அலகு 1 - இந்தத் திட்டம் 2007இல் தி.மு.க. ஆட்சியில் 4910 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.   500 மெகாவாட்.

9.            பெரியார் வைகை நீர்மின் உற்பத்தித் திட்டம் 2 - இந்தத் திட்டம் 
2003-2004இல் அ.தி.மு.க. ஆட்சியில் 14.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 2.5மெகாவாட்.

10.          பெரியார் நீர் மின்திட்டம் (அலகு 1) - இந்தத் திட்டம், 2003-2004இல் அ.தி.மு.க. ஆட்சியில்  18.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங் கப்பட்டது.   4 மெகாவாட்.

11.          பெரியார் நீர் மின் திட்டம் (அலகு 2) - இந்தத் திட்டம்  2004-2005இல் 18.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங் கப்பட்டது.  4 மெகாவாட்.

12.          பெரியார் நீர் மின்  திட்டம் (அலகு 4) - இந்தத் திட்டம் 2004-2005இல் அ.தி.மு.க. ஆட்சியில்  18.63  கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப் பட்டது.   4 மெகாவாட்.

13.          பவானி கட்டளை  கதவணை  3  -  இந்தத் திட்டம் 2004-2005இல் அ.தி.மு.க. ஆட்சியில் 49.40  கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.   10 மெகாவாட்.

14.          பெரியார் - வைகை நீர் மின் திட்டம் - 3 - இந்தத் திட்டம் 2004-2005இல் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  தொடங்கப்பட்டது.  2.5 மெகாவாட்.

15.          சிம்மாதிரி நிலை - 2 (அலகு 1) - இந்தத் திட்டம்மத்திய அரசுக்குச் சொந்தமானது.  500மெகாவாட்.

16.          சிம்மாதிரி நிலை - 2  (அலகு 2) - இந்தத் திட்டம்மத்திய அரசுக்குச் சொந்தமானது 500மெகாவாட்.

17.          கூடங்குளம் அலகு 1 - இந்தத் திட்டம் மத்திய அணு மின் கழகத்தால் தொடங்கப்பட்டது. 1000 மெகாவாட்.

18.          நெய்வேலி அனல் மின் நிலையம் - விரிவாக்கம் 2 - (அலகு 2) - இந்தத் திட்டம் மத்திய அரசுக்குச் சொந்தமானது.  250 மெகாவாட். மின் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ள இந்த

19.          திட்டங்களையும் எடுத்துக் கொண்டால், 3,860 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான திட்டங்கள், 22,915 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,  ஏற்கனவே நடைபெற்ற தி.மு.கழக ஆட்சியிலும் - வெறும்

27 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான திட்டங்கள் மட்டுமே  134.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  ஏற்கனவே நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியிலும்  - 2,250 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான திட்டங்கள் மத்திய அரசின் மூலமாகவும் தொடங்கப்பட்ட திட்டங்களாகும். மத்திய அரசின் திட்டங்களின் மூலமாக தமிழகத்திற்குக் கிடைத்தது  1,459.50 மெகாவாட் மின்சாரம்.

தமிழக முதலமைச்சரும்மின்துறை அமைச்சரும் திரும்பத் திரும்ப தாங்கள் ஏதோ 5,346.50மெகாவாட் மின்சாரத்தைத் தங்கள் ஆட்சிக் காலத்திலே திட்டமிட்டு - நிதி ஒதுக்கீடு செய்து - டெண்டர் கோரி - பின்னர் பணிகளை நிறைவு செய்து  மின் உற்பத்தி செய்திருப்பதைப் போல,  திரும்பத் திரும்ப மக்களிடம் திசை திருப்பும் வகையிலே எடுத்துக்கூறி ஏமாற்றி வருகிறார்களேஇதிலே உண்மை ஏதாவது இருக்கிறதாஇந்த விபரங்களனைத்தையும் மறைத்து விட்டு,  முதலமைச்சரும்மின்துறை அமைச்சரும் “கடந்த நான்காண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட புதிய மின் உற்பத்தியின் மூலம் 5346.5 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப் பட்டுள்ளது” என்று தம் நெஞ்சறிந்த பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அறிவித்த ஏராளமான மின் திட்டங்களிலிருந்து ஏதாவது ஒரு மெகாவாட் மின்சாரமாவது கிடைத்திருக்கிறதா?  அவற்றின் கதி என்னஅதற்கு ஏன் அமைச்சர் பதில் அளிக்கவில்லை?        

தமிழகச் சட்டப்பேரவையில் அன்றைய முதலமைச்சர் 
திரு. ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது  2011ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் இதுவரை முடிக்கப்பட்ட திட்டங்கள்நடுத்தர கால மற்றும் நீண்ட காலக் கொள்முதல் வாயிலாக 4,640 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது என்று பொத்தாம் பொதுவாக,குறிப்பிட்டு அதற்கான அடிப்படை ஆதாரங்கள் மற்றும் புள்ளி விபரங்கள் எதுவும்  இல்லாமல் அறிவித்தார். 

 

17-2-2015 அன்று  இந்த அரசின் சார்பாக ஆளுநர் ஆற்றிய உரையில்பக்கம் 25இல் “மொத்தமாக  மாநிலத்தின் மின் உற்பத்தித் திறன் கடந்த நான்காண்டுகளில் 3,358 மெகாவாட் அளவு அதிகரித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.  அப்போதே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.திரு. மோகன்ராஜ் இது பற்றி கூறும்போது, “தகவல் அறியும் சட்டத்தின்” அடிப்படையில் மின் உற்பத்தி பற்றி விவரம் கேட்டதாகவும்அதற்கு  ஒரு மெகாவாட் கூட அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மின் உற்பத்தி செய்யப்படவில்லை என்று தெரிய வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.  அ.தி.மு.க.  ஆட்சிக்கு வந்த பிறகு புதிய மின் உற்பத்தித் திட்டத்தை உருவாக்கிநிறைவேற்றிஅதன் மூலம்  இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை என்று ஆதாரங்களோடு ஏடுகளும் எழுதியிருக்கின்றன.   

 

ஆனால் ஜெயலலிதாவும்,  மின்துறை அமைச்சரும் எந்த விளக்கத்தையும் காதிலே போட்டுக் கொள்ளாமல், “தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றி விட்டோம்!” என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லும்  கிளிப் பிள்ளை போலச் சொல்லிக் கொண் டிருக்கிறார்களே என்றால்திரும்பத் திரும்பச் சொல்லப்படும் பொய் உண்மையாகி ஊராரை மயக்கி விடாதா என்ற நப்பாசைதான். இவர்கள் இடையறாமல் சொல்லும் இந்தச் செய்திபற்றியெரியும் நெருப்புக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பஞ்சுக் கொப்பானது என்பதை நாள்தோறும் மின்வெட்டின் பாதிப்புக்கு ஆளாகிவரும்  நாட்டு மக்கள் நன்றாகவே அறிவர்!