அமைச்சர் ஓ.பி.எஸ். எங்கே? தலைவர் கலைஞர் கேள்வி?

அமைச்சர் ஓ.பி.எஸ். எங்கே? தலைவர் கலைஞர் கேள்வி?

ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசில் என்னதான்  நடக்கிறதுகடந்த ஐந்தாண்டு காலமாக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் மீதெல்லாம் அவ்வப்போது பல்வேறு புகார்கள் வெளிவந்தன.   குறிப்பாக மின்துறை அமைச்சர் மீது பல கோடி ரூபாய் ஊழல் புகார்கள் எல்லாம்  பூர்வாங்க ஆதாரங்களுடன் கூறப்பட்டன. அப்போதெல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதா அவற்றைக் கண்டு கொள்ளாமல் பாராமுகமாகவே இருந்தார்.  தற்போது என்ன நிலைமை?

 

அன்றாடம் நாளேடுகளைப் பிரித்தால் வருகின்ற செய்திகள் எத்தகையவைஅமைச்சரவையில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில்ஏன் இரண்டு முறை நீதிமன்ற நடவடிக்கைகளால் ஜெயலலிதா பதவியிலிருந்து இறங்க வேண்டிய நேரத்தில் முதலமைச்சராகவே இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். இன்றும் அவர்தான் நிதியமைச்சர்.  ஆனால் அவருடைய கதி என்னஅவருடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஜெயலலிதா வாய்மொழி உத்தரவு உளவுத் துறைக்குப் பிறப்பித்துஅவர்கள் பன்னீர்செல்வத்திற்கு எங்கெங்கே எவ்வளவு சொத்துஎன்னென்ன முறைகேடுகளைச் செய்திருக்கிறார்எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தருவதாக அவருடைய ஆதரவாளர்கள் வசூலித்த பணம் எத்தனை கோடி என்ற விவரங்களையெல்லாம் திரட்டியிருக்கிறார்களாம். 

 

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி செய்த தவறால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நாகமுத்து என்ற பூசாரி கடிதம் எழுதி விட்டு உயிர் துறந்தது பற்றி  எதிர்க்கட்சிகள் குறைகூறிய போது அந்த அமைச்சர் மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டதாகிடையாது. இன்று அதேஓ.பி.எஸ்.சின் மகன்கள் செய்கின்ற  தவறுகள் பற்றி  புலனாய்வுத் துறை ஆராய்ந்து அறிக்கை கொடுக்கிறதாம்.

 

ஓ.பன்னீர்செல்வம்நத்தம் விசுவநாதன்பழனியப்பன் ஆகிய மூன்று அமைச்சர்களும் மாநிலம் முழுதும்  பலரிடம்  எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தருவதாக கோடி கோடியாக வசூல் செய்திருப்பதெல்லாம் அன்றாடம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று அமைச்சர்களும் சென்னையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று "கார்டன்" உத்தர விட்டுள்ளதாம். அதோடுஇவர்கள் கட்சிநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று தடை ஆணையாம்.  

 

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள்அ.தி.மு.க. மீனவர் பிரிவு துணைச் செயலாளர் டி.ரமேஷ்,  வேளச்சேரி எம்.எல்.ஏ. அசோக்தேனி மாவட்டம் எல்லப்பட்டி முருகன்,காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள் சின்னையா,தண்டரை மனோகரன்விஜயபாஸ்கர்தாம்பரம் கரிகாலன்வரகூர் அருணாசலம் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. நத்தம் விசுவநாதனின் நெருங்கிய நண்பரான பழனி நகரச் செயலாளர்கே.மாரியப்பன் பதவியும் பறிக்கப்பட்டது. தொடர்ந்து தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்ட எம்.எம்.பாபுவின் மாவட்டச் செயலாளர் பதவியும்,   ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்த டி.ஆர்.என்.வரதராஜன்தேனி மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்த ஆர்.ஆர்.ஜெகதீஸ்,  ஆண்டிப்பட்டி ஒன்றியம் மாவட்டப் பிரதிநிதி பொறுப்பில் இருந்த எம்.ராஜ்குமார் ஆகியோர் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. 

 

ஓ.பன்னீர்செல்வத்தின் நிழல் என்று வர்ணிக்கப்பட்டு வந்த சீனி கந்தசாமிபோயஸ் கார்டன் முன்னாள் ஊழியர் ரமேஷ்குமார்,சிவகாசியைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை  நடத்தியதில்நீலாங்கரையில் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்துமாநிலம் முழுவதும் பன்னீர் செல்வம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உதவியுடன் ஏராளமானவர் களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளதாகத் தெரிவித்தனர். அவர்கள் மூவரும்நாங்கள் அப்பாவிகள்,  எங்களுக்கு சம்பளம் மட்டுமே கொடுத்தனர்முழுப் பணத்தையும் மேலிடத்தில் கொடுத்து விட்டோம்ஏராளமானவர்களிடம் நாங்கள் பணம் வாங்கிக் கொடுத்துள்ளோம் என்று கூறியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால்ஓ.பன்னீர்செல்வம் அவர்களை ஓரங்கட்டி,சென்னையில் முடக்கி வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். அவருடைய நெருங்கிய நண்பர் செல்லமுத்துகடமலை மயிலை ஒன்றியத் தலைவர் முருக்கோடை ராமர் இல்லத் திருமணங்கள் எல்லாம் அவருடையதலைமையிலேதான் நடைபெறுவதாக இருந்தாலுங்கூடகலந்து கொள்ளவில்லையாம்.அந்த அழைப்பிதழ்களில் கூட வழக்கமாக இடம் பெறும் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெறவில்லையாம். திருமணத்தில் கலந்துகொள்ள பயணம் புறப்பட்ட பிறகுரத்தாகி விட்டதாம்.  

 

"அமைச்சர் ஓ.பி.எஸ். எங்கே?" என்றே நாளேடு ஒன்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், "தமிழக நிதியமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு ஆட்சி மேலிடத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து,அவர் தொடர்பான வதந்திகள்நாலாபுறமும் றெக்கை கட்டிப் பறக்கின்றன.  குறிப்பாக "வாட்ஸ்-அப்"யில் அவர் பற்றிய செய்திகள்,நொடிக்கொரு முறை வந்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது.  இந்நிலையில் அமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள அமைச்சர் பங்களாவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும்;சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் "வாட்ஸ்-அப்" மூலம் வதந்திகள் பரப்பப்பட்டுவருகின்றன. தேனி மாவட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமான தோப்பில் உள்ள பங்களா ஒன்றில் அவர் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி பரப்பப்பட்டுள்ளது"  என்று  "தினமலர்" இன்று எழுதியுள்ளது.