தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தலைவர் கலைஞர் ஆற்றிய உரை!

தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தலைவர் கலைஞர் ஆற்றிய உரை!

மாவட்டக் கழகச்செயலாளர்கள் கூட்டத்தில் சில கருத்துகளை உங்கள் முன்னால் வைப்பதற்கு நான் மிகுந்தஉணர்வோடு  உங்களைச் சந்திக்கின்ற  இந்தவேளையில்அந்தக் கருத்துகள் எப்படிப்பட்டவை,எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டியவை என்பதையெல்லாம்  நீங்களே  சீர்தூக்கிப் பார்த்து  நல்லமுடிவெடுக்க வேண்டுமென்று முதலிலே கேட்டுக்கொள்கிறேன்.

 

 திராவிட முன்னேற்றக் கழகம்,பேராசிரியர் குறிப்பிட்டதைப் போலதம்பிதுரைமுருகன் குறிப்பிட்டதைப் போலஒருஅரசியல் கட்சி மாத்திரமல்ல;  இது ஒரு சமுதாயஇயக்கம்.   சமுதாயத்தை முன்னேற்றமுயற்சிகளை மேற்கொள்கின்ற இயக்கம்இந்தஇயக்கம்.   அந்த இயக்கத்தைக் கட்டிக் காக்கவேண்டிய பெரும் பொறுப்பு நமக்கெல்லாம்இருக்கிறது.   பேராசிரியர் அவர்கள் இதேகருத்தை வைத்து  நீண்ட நேரம் பேசுகின்றஆற்றல் பெற்றவர் என்றாலும்இன்றையசூழ்நிலையில் அவரும்நானும் எல்லாவற்றிலும்இணைந்திருக்க வேண்டும் என்பதற்கேற்ப,இருவருக்குமே  குரல் வளம் சரியில்லாதநிலையில் இன்றைக்கு இருவரும்ஒன்றுபட்டிருக்கிறோம்.   போகப் போகச் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையிலே தான் இன்றைக்குநான் சில கருத்துகளை உங்கள் முன்னால் வைக்கவிரும்புகிறேன்.

 

இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள்கூட்டத்தில்தம்பி மு.ஸ்டாலின் தன்னுடையஉரையை  நிறைவு செய்வதற்கு முன்பு   ஒருகடினமான ஆனால் உங்களுக்குச் சுலபமான,பாடுபட்டால் பயன் கிடைக்கும் என்ற ஒருவிஷயத்தை உங்களிடத்திலே சொன்னார்.   இந்தஇயக்கத்திற்குத் தொடர்ந்து வெற்றி கிடைக்கும்,நாம் எண்ணியதெல்லாம் நடக்கும் என்ற ஒருசூழல் உருவாக வேண்டுமேயானால்அதற்கு முதல்கட்டமாக நடைபெறவிருக்கின்ற  இந்தத்தேர்தலில் ஒவ்வொரு மாவட்டக் கழகச்செயலாளரும் குறைந்த பட்சம்  எத்தனை தொகுதிகளை  வெற்றி பெற்றுத் தரவேண்டுமென்ற பொறுப்பை ஏற்க வேண்டும் என்றுஇங்கே பேசும்போது ஸ்டாலின் குறிப்பிட்டார்.  அவர் அவ்வாறு சொன்னதற்குக் காரணம்,  நீங்கள்கடினமாக உங்கள் உழைப்பை நல்கிஉங்களுடைய  ஆர்வத்தை வெளிப்படுத்தும்வகையில்இதிலே ஒரு போட்டி ஏற்பட்டால்தான்,   நாம் நினைத்தவாறு  வெற்றியினை எய்திடமுடியும் என்பதற்காக அவர் அப்படிச் சொன்னார்.  அப்படி வெற்றி பெற்றுத் தர என்று எடுத்துக்கொள்ளாமல்நாம் நமக்காகப் பாடுபட வேண்டும்நமக்காக உழைத்திட வேண்டும்.  நமக்காகஎன்றால்நமக்கு நாமே என்பதைப் போலஅந்தஉழைப்பு  நமக்குத் தருகின்ற வெற்றி அடுத்தடுத்துவருகின்ற பல தேர்தல்களுக்கு அடையாளமாக,அல்லது தொடக்கமாக அமைய வேண்டும் என்கிறஆர்வத்திலே தான் அவர் இங்கே பேசும் போது அந்த ஒரு கருத்தைச் சொன்னார்.   உங்களைமிரட்டுவதற்கோஇல்லாவிட்டால்  அவர் எண்ணிக்கொண்டதைச் செய்யாவிட்டால் என்ன ஆகுமோஎன்று பயப்படுவதற்கோ சொல்லப்பட்டவார்த்தைகள் அல்ல.   அவரையும் சேர்த்துத் தான் அந்த நிபந்தனையை  இங்கே இந்த மேடையிலேஅவர் சொன்னார்.   ஆகவே  அந்தக் கருத்தைநீங்கள் ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டுகுறைந்தபட்சம் சிறிய மாவட்டங்களில் இரண்டுதொகுதிகளிலும்,  அதை விட பெரியமாவட்டங்களில்,  நாங்கள்  உங்களை மீறிக்காட்டுகிறோம்நாங்கள்  மூன்று நான்குதொகுதிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்தால்ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று  அவரைக்கேட்கின்ற அளவுக்குஅந்த அளவுக்கு சவால்விடுகின்ற அளவுக்கு  நீங்கள்  வென்றுகாட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.     நான்நிச்சயமாக நம்புகிறேன்.    “உன்னால் முடியும்தம்பி” என்று அண்ணா அவர்கள் எழுதியது என் இதயத்தில் இன்றைக்கும் பசுமரத்தாணி போல்பதிந்திருக்கிறது.   “உன்னால் முடியும்” என்ற அந்தவாசகத்தை நீங்கள் மறக்காமல்இந்தத் தேர்தல்நேரத்தில் பயன்படுத்திபேராசிரியர் அவர்கள்இங்கே குறிப்பிட்டதைப் போல வெற்றியைஅறுவடை செய்து  என்னிடத்திலே  அந்த வெற்றிக்கொடியைக் காட்டுவீர்களேயானால்  நான்ஏறத்தாழ  92  ஆண்டுகள் வாழ்ந்ததற்கானபயனைஅந்த வெற்றிக் கொடியைப் பார்த்தவுடன்நான் அடைய முடியும்.  ஆகவே அதற்கு நீங்கள்வழி வகுத்திடுங்கள்.

 

திராவிட முன்னேற்றக் கழகம் நீண்டகாலம் தமிழகத்திலே வாழ வேண்டியஉலவவேண்டிய ஒரு இயக்கம்.  அந்த இயக்கத்திற்கு நேற்றைக்குக் கூடதிருச்சி யிலே நடைபெற்றதிராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றமாநாட்டில் கலந்து கொள்கின்ற வாய்ப்புஇல்லாவிட்டாலும்அது முடிந்தவுடன் அந்தமாநாட்டின் காட்சிகளைப் பார்க்கின்ற வாய்ப்புஎனக்கு ஏற்பட்டது.   பெருமிதத்தோடு திராவிடக்கழகத் தோழர்கள் நேற்றைக்குப் பெற்றிருக்கின்றவெற்றியை எண்ணியெண்ணி மகிழ்ந்தார்கள்அந்த மகிழ்ச்சியை  நாம் அடையவேண்டுமேயானால்தேர்தலில்  நிற்பதுஅதிலேவெற்றி தோல்விகளைச் சந்திப்பது என்பதல்லவெற்றி ஆனாலும்தோல்வி ஆனாலும்இரண்டையும் சமமாகக் கருதி,  அதற்காகத்தோல்வியைச் சமமாக கருதுவோம் என்று யாரும்கருதாமல்வெற்றியைப் பெறுவதைத் தான் நாங்கள் எங்களுடைய  முனைப்பானப் பணியாகக்கருதுவோம் என்று சூளுரைத்துஅந்த வெற்றியைஅறுவடை செய்ய வேண்டுமென்று உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொண்டு,  வெற்றிப்பாதையில்  நடை போடுங்கள்.  

 

இங்கே நீங்கள் நடக்கின்ற பாதை,ஏதோ அறிவாலயத்திற்கு வந்தோம்,  அங்கிருந்துசெல்கிறோம் என்று எண்ணாமல்தலைவரையும்,பொதுச் செயலாளரையும்கழகமுன்னணியினரையும் சந்தித்தோம்சந்தித்த நாம்வெற்றியை அறுவடை செய்யப் போகிறோம் என்றஅந்த உறுதியோடுஅந்த சூளுரைக்கின்றமனப்பான்மையோடு,  பாடுபடுங்கள்,பணியாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டு,பேராசிரியர் குறிப்பிட்டதைப் போலஎனக்கும் குரல் வளம் இல்லைநானும்தினந்தோறும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுத்தான் வருகிறேன்அநேகமாக உங்களோடு கலந்துபேசுகின்ற அளவுக்கு விரைவில் குணம் பெறுவோம்என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.  அந்தநம்பிக்கை வீண் போகாமல்,  குணம் பெறும்நம்பிக்கை மாத்திரமல்ல,  நாம் வெற்றி பெறுவோம்என்ற நம்பிக்கையை இழக்காமல்நாம் இந்தத்தேர்தலில் எதிரிகளுக்குப் பாடம் கற்பிக்கின்றவகையில் நம்முடைய  பணியை வகுத்துக்கொண்டு செயலாற்றுவோம்.   முதலில் நான்கேட்டுக் கொள்வதுநேற்றையதினம்  திருச்சியில்நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில்குறிப்பாக சாதியைப் பற்றிசாதி பேதம் கூடாதுஎன்பதைப் பற்றி அதிகமாக கருத்துகள்எடுத்துரைக்கப்பட்டன.  தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில் இங்கே நம்முடைய நண்பர்கள்அனைவரும் ஒன்று  என்ற அந்த உணர்வோடுபாடுபட வேண்டும்.  நமக்கிடையே சமுதாயத்துறையில் நாம் பரப்பி வந்த சாதிபேதமற்றசமுதாயத்தை உருவாக்குவோம்.  “சாதிகள்இல்லையடி பாப்பா”  என்ற அந்தப் பாடலைநம்முடைய கீதமாகக் கொள்வோம்.   சாதிகளைநாம் போற்றினால்புகழ்ந்தால்அதற்குப்பாராட்டுத் தெரிவித்தால் அந்தச் சாதிகளே நம்மைஅழித்து விடும் என்பதை மனதிலே கொள்ளவேண்டுமென்று கேட்டுக் கொண்டு,  சாதிகள் அற்றமதவேறுபாடுகள் அற்றமாபெரும் தமிழ்ச்சமுதாயத்தைதிராவிடச் சமுதாயத்தை கட்டிக்காக்க நாம் இன்றைக்கே சபதம் எடுத்துக்கொள்வோம் என்று உங்களுக்கு உணர்த்தி,நானும் உணர்ந்துநாம் உணர்ந்ததை மக்களுக்குஎடுத்துச் சொல்கின்ற வகையில் பாடுபடபணியாற்ற என்னைப் போலவே எல்லோரும்தயாராக வேண்டுமென்று கேட்டுக் கொண்டு,அடுத்த முறை உங்களை யெல்லாம் பார்க்கும்போது,  இதே கூடத்தில் நீங்கள் எல்லாம் வெற்றிவீரராகவெற்றி பெற்ற இளம் வீரராக இங்கேஅமர்ந்திருக்கின்ற கண்கொள்ளா காட்சியைக்காண்பேன்காண்பேன் என்ற நம்பிக்கையோடுஇந்த அளவில் என்னுடைய உரையை இங்கேநிறைவு செய்கிறேன்.