மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதலமைச்சரின் விளக்கம் என்ன? தலைவர் கலைஞர் அறிக்கை

மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதலமைச்சரின் விளக்கம் என்ன? தலைவர் கலைஞர் அறிக்கை

        தமிழகத்தில்   .தி.மு.ஆட்சியில்  முதல் அமைச்சரையோ,  துறைகளின்அமைச்சர்களையோ சந்திக்க முடியவில்லை என்றகுற்றச்சாட்டு பலராலும் பல நாட்களாகக்கூறப்பட்டு வருகிறது.   மதுரவாயல் - துறைமுகம்பறக்கும் சாலைத் திட்டத்தை உள்நோக்கத்தோடு,.தி.மு.அரசு முடக்கி வைத்த காரணத்தால்சென்னை துறைமுகத்தின் கையாளும் திறன்படிப்படியாகக் குறைந்து,   மூடக்கூடிய நிலைமைஏற்பட்டுள்ளதாகச்  செய்தி வந்தது.  சென்னைத்துறைமுகம் பற்றி  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது,  “மதுரவாயல்பறக்கும் சாலைத் திட்டத்தைப் பொறுத்தவரைநீதி மன்றத்திற்கு வெளியே பேசித் தீர்க்க தமிழகஅரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.  தேவைப்பட்டால் ஏற்கனவே அமைக்கப்பட்டபாதையில் சிறிய மாற்றம்  அல்லது புதிய பாதைஅமைக்கக் கூட நாங்கள் தயாராக உள்ளோம்.  இத்திட்டத்தை செயல்படுத்தாவிட்டால்,  மிகவும்பழமை வாய்ந்த  சென்னைத் துறைமுகம்வருங்காலத்தில் காட்சிப் பொருளாக மாறவாய்ப்புள்ளது.  எனவேஇந்தப் பிரச்சினையில்தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்” என்றுமதுரவாயல் பறக்கும் சாலைத்  திட்டம்செயலாக்கம் பெற வேண்டுமென்றமுக்கியத்துவத்தை உணர்ந்து கூறியிருக்கிறார். “தினமலர்” நாளேடு கூட 13-3-2016 அன்றுவிரிவாக வெளியிட்ட  செய்தியில், “ஆரம்பத்தில் நன்கு இலாபத்தில் இயங்கி வந்த  சென்னைத்துறைமுகம்மாநில .தி.மு.அரசின்ஒத்துழைப்பு கடந்த சில ஆண்டுகளாகஇல்லாததால்   பெரும் நட்டத்தில் இயங்குகிறது.  துறைமுகத்தின் முக்கிய பிரச்சினையே போக்குவரத்து நெருக்கடி தான்.   இதைச் சரிசெய்ய தி.முகழக ஆட்சியில்  மதுரவாயல்பறக்கும் சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது.  ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு அத்திட்டத்தை முடக்கிவைத்துள்ளது.  கடந்த 2010ஆம் ஆண்டு வரைசென்னைத் துறைமுகம் ஆண்டுக்கு சுமார் 500கோடி ரூபாய்க்கு மேல் இலாபம் சம்பாதித்தது.   அதன் பிறகு துறைமுகம் நட்டத்தில் இயங்கஆரம்பித்தது”   என்றெல்லாம்  “தினமலர்” நாளேடே எழுதியிருப்பதில் இருந்தே சென்னைத்துறைமுகத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்சென்னை மாநகரத்தின் முக்கியமான அடிப்படைக்கட்டமைப்பு  மேம்பாட்டுத் திட்டமான மதுரவாயல்பறக்கும் சாலைத் திட்டம் குறித்து மத்தியஅமைச்சரும்சில நாளேடுகளும் எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு  அதிமுக அரசு இதுவரைபதிலேதும் அளிக்க வில்லை.

 

        இந்த நிலையில்  மத்திய மின்சாரத்துறை அமைச்சர்திரு பியுஷ் கோயல் அவர்கள் நேற்றையதினம் (26-3-2016) டெல்லியில் பேசும்போது,  “நான் பல மாநிலங்களில்நிறைவேற்றப்பட வேண்டிய  மின் திட்டங்கள்தொடர்பாக  அங்குள்ள முதலமைச்சர்மற்றஅமைச்சர்களுடன்  பேசிவருகிறேன்.   கடந்த18 மாதங்களில் இப்படி  28 மாநிலத்தின் மின்துறை அமைச்சர்களை மட்டுமல்லமுதல்வர்களுடன் கூட சந்தித்துப் பேச முடிந்ததுஇதில் 29வது மாநிலம் தமிழ்நாடு;  தமிழ்நாடுஇந்தியாவின் ஒரு அங்கம் தான்.   ஆனால் தமிழகமுதலமைச்சர்  ஜெயலலிதாவை  என்னால் இதுவரை  தொடர்பு கொள்ள முடியவில்லை.  ஒருமுறை மின் துறை அமைச்சரிடம்  பேசினேன்.  அதற்கு அவர், “நான் அம்மாவிடம் பேசுகிறேன்என்றார்.   ஆனால் அதன்பின் பல மாதங்கள் பதில்வரவில்லை.   நாடாளுமன்றத்தில் இந்தக் கட்சிஎம்.பி.க்கள் தாங்களாகவே  ஒருவரும் வாய்திறப்பதே இல்லை.   அவர்கள் ஏதாவது  ஒருவிஷயத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால்அதற்குசென்னையில் இருந்து  அறிக்கை தயாரித்து வரவேண்டும்.    கடந்த 18 முதல் 22 மாதங்களில்தமிழக முதல்வருடனும் பேச முயற்சி செய்தேன்என்னால்ஒரே ஒரு முறை மட்டுமே தொடர்புகொள்ள  முடிந்தது.  அடுத்த முறை சென்னையில்சந்திக்க உறுதி அளித்தார்.  ஆனால்இதுவரைஎனக்கு அவரிடமிருந்து வாய்ப்பு  கிடைக்கவேஇல்லை.  தமிழகத்தில் ஆட்சி மாற்றம்ஏற்பட்டாலொழிய மின் துறையைப் பொறுத்தவரைஅந்த மாநிலத்திற்கு என்னால் எதுவும் செய்யமுடியாது.  (Unless there is a change of Government in Tamil Nadu, I cannot make any significant impact)” என்று பேசி,ஊடகங்களில் எல்லாம் பரபரப்பாக  அந்தச்செய்தி வந்துள்ளது.

 

        .தி.மு.அரசுமத்திய அரசோடுஎந்த அளவுக்குத் தொடர்பு வைத்துள்ளதுஎன்பதற்கு  இதைவிட வேறு உதாரணம்தேவையில்லை.   தமிழகத்திலே உள்ள பல்வேறுபிரச்சினைகள் பற்றி .தி.மு.அரசின் சார்பில் அவ்வப்போது மத்திய அரசின் அமைச்சர்களோடுதொடர்பு கொண்டு பேசினால் தானே தமிழகத்திற்குத் தேவையானவற்றைச் செய்திடஇயலும்.   தமிழக முதல் அமைச்சர்வேண்டுமானால்,  “பிரதமரோமத்திய நிதிஅமைச்சரோ என் வீட்டிற்கு என்னைத் தேடி வந்துசந்தித்து விட்டுப்போகட்டும்” என்ற அளவிலேஇருந்தால் தமிழ்நாட்டின் தேவைகள் எவ்வாறுநிறைவேறும்

 

பத்திரிகையாளர்களும்ஜெயலலிதாவைப் பார்க்க முடிவதில்லை.  மத்தியஅமைச்சர்களும் அவரைப் பார்த்துப் பேசமுடியவில்லை.  வாக்களித்த பொது மக்களும்தங்கள் குறைகளை முதலமைச்சரிடம் நேரில்சொல்ல வாய்ப்பளிப்பதில்லை.   ஏன்;  மூத்தஅதிகாரிகளே கூட முதல்வரை  நேரில் கண்டு நிர்வாகப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கு  நேரம்குறிப்பதில்லை.  அது மட்டு மல்லாமல் .தி.மு..அமைச்சர்களோசட்டப் பேரவைஉறுப்பினர்களோ கூடதேவை எழும்போதுசகஜமாக முதல்வரைச் சந்திப்பதற்கான சூழ்நிலை  இங்கே இல்லை.  இப்படிமுதலமைச்சர் திரைமறைவில் வாழ்ந்துகொண்டிருந்தால்நிர்வாகச் சக்கரம் எப்படிமக்களுக்குப் பயன்தரும் வகையில் சுழலும்மாநிலத்தில் ஜனநாயகம் எப்படி உயிர்ப்போடுஉலவிட முடியும்?  

 

   மத்திய அரசின் மின் துறை அமைச்சர்அவர்களேதனக்கு முதலமைச்சரையோ அல்லதுஅமைச்சரையோ சந்தித்து விவாதிக்க வாய்ப்பு இல்லை என்று  பொது நிகழ்ச்சி ஒன்றில்  தமிழகஅரசு பற்றி பேசியிருக்கிறார் என்கிற போது,இதற்கு  .தி.மு.அரசின் பதில் என்ன என்பதைஉடனடியாக தமிழக முதல் அமைச்சர் அளிப்பார்என்று எதிர்பார்க்கிறேன்!