மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதலமைச்சரின் விளக்கம் என்ன? தலைவர் கலைஞர் அறிக்கை

மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதலமைச்சரின் விளக்கம் என்ன? தலைவர் கலைஞர் அறிக்கை

 தமிழகத்தில்   .தி.மு..  ஆட்சியில்  முதல் அமைச்சரையோ,  துறைகளின்அமைச்சர்களையோ சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் பல நாட்களாகக்கூறப்பட்டு வருகிறது.   மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைஉள்நோக்கத்தோடு.தி.மு.அரசு முடக்கி வைத்த காரணத்தால் சென்னை துறைமுகத்தின்கையாளும் திறன் படிப்படியாகக் குறைந்து,   மூடக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகச்  செய்திவந்தது.  சென்னைத் துறைமுகம் பற்றி  மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன்கூறும்போது,  “மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தைப் பொறுத்தவரை,  நீதி மன்றத்திற்குவெளியே பேசித் தீர்க்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.   தேவைப்பட்டால் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதையில் சிறிய மாற்றம்  அல்லது புதிய பாதை அமைக்கக் கூடநாங்கள் தயாராக உள்ளோம்.   இத்திட்டத்தை செயல்படுத்தாவிட்டால்,  மிகவும் பழமை வாய்ந்த சென்னைத் துறைமுகம் வருங்காலத்தில் காட்சிப் பொருளாக மாற வாய்ப்புள்ளது.  எனவே,இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்” என்று மதுரவாயல் பறக்கும்சாலைத்  திட்டம் செயலாக்கம் பெற வேண்டுமென்ற முக்கியத்துவத்தை உணர்ந்துகூறியிருக்கிறார். “தினமலர்” நாளேடு கூட 13-3-2016 அன்று விரிவாக வெளியிட்ட  செய்தியில், “ஆரம்பத்தில்  நன்கு இலாபத்தில் இயங்கி வந்த  சென்னைத் துறைமுகம்மாநில .தி.மு..அரசின் ஒத்துழைப்பு கடந்த சில ஆண்டுகளாக இல்லாததால்   பெரும் நட்டத்தில் இயங்குகிறது.  துறைமுகத்தின் முக்கிய பிரச்சினையே  போக்குவரத்து நெருக்கடி தான்.   இதைச் சரி செய்யதி.முகழக ஆட்சியில்  மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது.   ஆனால்அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக  அதிமுக அரசு அத்திட்டத்தை முடக்கி வைத்துள்ளதுகடந்த 2010ஆம் ஆண்டு வரை சென்னைத் துறைமுகம் ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய்க்குமேல் இலாபம் சம்பாதித்தது.    அதன் பிறகு துறைமுகம் நட்டத்தில் இயங்க ஆரம்பித்தது”  என்றெல்லாம்  “தினமலர்”  நாளேடே எழுதியிருப்பதில் இருந்தே சென்னைத் துறைமுகத்தைப்பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.  சென்னை மாநகரத்தின் முக்கியமான அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமான மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் குறித்து மத்திய அமைச்சரும்,சில நாளேடுகளும் எழுப்பியுள்ள  பிரச்சினைகளுக்கு  அதிமுக அரசு இதுவரை பதிலேதும்அளிக்க வில்லை.

 

        இந்த நிலையில்  மத்திய மின்சாரத் துறை அமைச்சர்திரு பியுஷ் கோயல் அவர்கள் நேற்றையதினம் (26-3-2016) டெல்லியில்  பேசும்போது,  “நான் பல மாநிலங்களில்நிறைவேற்றப்பட வேண்டிய  மின் திட்டங்கள் தொடர்பாக  அங்குள்ள முதலமைச்சர்மற்றஅமைச்சர்களுடன்  பேசிவருகிறேன்.   கடந்த 18 மாதங்களில் இப்படி  28 மாநிலத்தின்  மின்துறை அமைச்சர்களை மட்டுமல்லமுதல்வர்களுடன் கூட சந்தித்துப் பேச முடிந்தது.  இதில் 29வது மாநிலம் தமிழ்நாடு;  தமிழ்நாடுஇந்தியாவின் ஒரு அங்கம் தான்.   ஆனால் தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவை  என்னால்இது வரை  தொடர்பு கொள்ள முடியவில்லை.   ஒருமுறை மின் துறை அமைச்சரிடம் பேசினேன்.   அதற்கு அவர், “நான் அம்மாவிடம் பேசுகிறேன்” என்றார்.   ஆனால் அதன்பின் பலமாதங்கள் பதில் வரவில்லை.   நாடாளுமன்றத்தில் இந்தக் கட்சி எம்.பி.க்கள் தாங்களாகவே ஒருவரும் வாய் திறப்பதே இல்லை.   அவர்கள் ஏதாவது  ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசவேண்டுமானால்அதற்கு சென்னையில் இருந்து  அறிக்கை தயாரித்து வர வேண்டும்.    கடந்த 18முதல் 22 மாதங்களில் தமிழக முதல்வருடனும் பேச முயற்சி செய்தேன்.  என்னால்ஒரே ஒருமுறை மட்டுமே தொடர்பு கொள்ள  முடிந்தது.  அடுத்த முறை சென்னையில் சந்திக்க உறுதிஅளித்தார்.  ஆனால்இதுவரை எனக்கு அவரிடமிருந்து வாய்ப்பு  கிடைக்கவே இல்லைதமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலொழிய மின் துறையைப் பொறுத்தவரை அந்தமாநிலத்திற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது.  (Unless there is a change of Government in Tamil Nadu, I cannot make any significant impact)” என்று பேசிஊடகங்களில் எல்லாம் பரபரப்பாக  அந்தச்செய்தி வந்துள்ளது.

 

        .தி.மு.அரசுமத்திய அரசோடு எந்த அளவுக்குத் தொடர்பு வைத்துள்ளதுஎன்பதற்கு  இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.   தமிழகத்திலே உள்ள பல்வேறுபிரச்சினைகள் பற்றி .தி.மு.அரசின் சார்பில்  அவ்வப்போது மத்திய அரசின்அமைச்சர்களோடு தொடர்பு கொண்டு பேசினால் தானே  தமிழகத்திற்குத் தேவையானவற்றைச்செய்திட இயலும்.   தமிழக முதல் அமைச்சர் வேண்டுமானால்,  “பிரதமரோமத்திய நிதிஅமைச்சரோ என் வீட்டிற்கு என்னைத் தேடி வந்து சந்தித்து விட்டுப்போகட்டும்” என்ற அளவிலேஇருந்தால் தமிழ்நாட்டின் தேவைகள் எவ்வாறு நிறைவேறும்

 

பத்திரிகையாளர்களும் ஜெயலலிதாவைப் பார்க்க முடிவதில்லை.  மத்தியஅமைச்சர்களும் அவரைப் பார்த்துப் பேச முடியவில்லை.  வாக்களித்த பொது மக்களும்,  தங்கள்குறைகளை முதலமைச்சரிடம் நேரில் சொல்ல வாய்ப்பளிப்பதில்லை.   ஏன்;  மூத்தஅதிகாரிகளே கூட முதல்வரை  நேரில் கண்டு  நிர்வாகப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கு நேரம் குறிப்பதில்லை.  அது மட்டு மல்லாமல் .தி.மு.அமைச்சர்களோசட்டப் பேரவைஉறுப்பினர்களோ கூடதேவை எழும்போது சகஜமாக முதல்வரைச் சந்திப்பதற்கான  சூழ்நிலை இங்கே இல்லை.  இப்படி முதலமைச்சர் திரைமறைவில் வாழ்ந்து கொண்டிருந்தால்நிர்வாகச்சக்கரம் எப்படி மக்களுக்குப் பயன்தரும் வகையில் சுழலும்?  மாநிலத்தில் ஜனநாயகம் எப்படிஉயிர்ப்போடு உலவிட முடியும்?  

 

   மத்திய அரசின் மின் துறை அமைச்சர் அவர்களேதனக்கு முதலமைச்சரையோஅல்லது அமைச்சரையோ சந்தித்து விவாதிக்க வாய்ப்பு  இல்லை என்று  பொது நிகழ்ச்சிஒன்றில்  தமிழக அரசு பற்றி பேசியிருக்கிறார் என்கிற போதுஇதற்கு  .தி.மு.அரசின் பதில்என்ன என்பதை உடனடியாக தமிழக முதல் அமைச்சர் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்!