சுங்கச் சாவடி கட்டண உயர்வினை நிறுத்திட தலைவர் கலைஞர் வலியுறுத்தல்

சுங்கச் சாவடி கட்டண உயர்வினை நிறுத்திட தலைவர் கலைஞர் வலியுறுத்தல்

இன்று நள்ளிரவு முதல்  தமிழகத்தில் உள்ள 18 சுங்கச் சாவடிகளில்  நுழைவு கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.   இதன் காரணமாகவாகனங்களில்  உரிமையாளர்கள் பாதிப்பதோடுசரக்கு  வாகன வாடகை மற்றும் அத்தியாவசியப்பொருள்களின் விலைகளும் அதிகரிக்கக் கூடியஅபாயம் உள்ளது.   இந்தியா முழுவதும்  தேசியநெடுஞ்சாலைகளில் உள்ள 350க்கும் மேற்பட்டசுங்கச் சாவடிகளில்,  தமிழகத்தில் மட்டும் மொத்தம்  44 இடங்களில் சுங்கச் சாவடிகள்உள்ளன.  இவற்றில் 26  இடங்களில்  
செப்டம்பர்  1 ஆம் தேதியும்,  18  இடங்களில்ஏப்ரல்  1 ஆம் தேதியும்  கட்டணம்  அதிகரிப்பதுஎன்பது நடைமுறையிலே உள்ளது.   அதன்படிதிருவள்ளூர்,  விழுப்புரம்,  சேலம்,  துhத்துக்குடி,வேலுhர்நெல்லை,  திருச்சிமதுரை  ஆகியமாவட்டங்களில்,  தேசிய நெடுஞ்சாலைகளில்உள்ள  18 சுங்கச் சாவடிகளில்  கட்டணம் 
 12 
சதவிகிதம் வரை உயர்த்தப்படவுள்ளது

 

          சுங்கக் கட்டணங்களையே  ரத்து செய்யவேண்டும் எனக் கூறி  கட8ந்த அக்டோபரில்  லாரிஉரிமையாளர்கள்  நாடு முழுவதும் வேலைநிறுத்தத்திலே  ஈடுபட்டார்கள்.  ஆனால்அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.படிப்படியாக சுங்கச் சாவடிகளை அகற்றநடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசுஅறிவித்தது.    இந்த நிலையில்  சுங்கக்கட்டணத்தை மேலும் உயர்த்துவது என்பது லாரிஉரிமையாளர்களிடம்  பெரும்  கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது.

 

          சுங்கச் சாவடிகளை  நடத்தும்  தனியார்நிறுவனங்கள் தான்  சாலை பராமரிப்பு  எதையும் செய்யாமல்,  இதன் பயனை அனுபவித்துவருகிறார்கள்.   சுங்கக் கட்டணத்தால்   நடுத்தரமக்களும்,  வியாபாரப் பெருமக்களும்,  லாரிஉரிமையாளர்களும்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளநிலையில்,  சுங்கக் கட்டணத்தை மேலும்உயர்த்துவது என்பது  வேண்டாத வேலையாகும்எனவே  மத்திய அரசு இந்தப் பிரச்சினையில்உடனடியாகத் தலையிட்டு,  சுங்கச் சாவடிகளின்கட்டண உயர்வினை நிறுத்தி வைக்கவேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின்சார்பில் வலியுறுத்துகிறேன்.